அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் | தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு | ஹரிஷ் கல்யாணின் டீசல் | பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி | சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி | இது சூப்பர் ஜோடி : திரவியும் - ஸ்வாதி ஜோடிக்கு ரசிகர்கள் கமெண்ட் | சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனே - நயன்தாரா | மீனாவின் கணவர் மரணம் ; யாரையும் பயமுறுத்த வேண்டாம் : குஷ்பு |
மலையாள நடிகையான பிரியாலால் தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பட்ட படிப்பிற்காக லண்டன் சென்றார். படிப்பை முடித்து விட்டு திரும்பியுள்ள அவர் தற்போது தெலுங்கு படமான குவா கோரிங்க படத்தில் அறிமுகமாகிறார்.
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இணை இயக்குனர் மோகன் பம்மிடி இயக்கும் முதல் படம் இது. கல்லூரி காதலை மையமாக கொண்ட இப்படத்தில் இளம் கதாநாயகன் சத்தியதேவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் பிரியாலால் . டிசம்பர் 17-ம் ஆமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது .
ஜீனியஸுக்கு பிறகு எனக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் தேடி வந்த போது படிப்பை முடிக்க வெளிநாட்டில் இருந்ததாலும், தெலுங்கு படம் நடித்து முடிக்க வேண்டி இருந்ததாலும் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்த முடியாமல் போனது. படிப்பு முடிந்து விட்டதால் இனி எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டேன். தமிழில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசையும் லட்சியமும். என்கிறார் பிரியாலால்.