அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் |
தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட பல விவகாரங்கள் டுவிட்டர் தளத்தில் தான் கடும் பரபரப்பை ஏற்படுத்தும். டிரெண்டிங், ஹேஷ்டேக் சாதனை என விஜய், அஜித் ரசிகர்கள் தான் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்.
ஆனால், இன்று வித்தியாசமாக விஜய், சூர்யா ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்கள். 2020ம் ஆண்டில் இந்திய அளவில் டுவிட்டர் பதிவுகளில் எவையெவை சாதனை புரிந்தன என்ற பட்டியலை டுவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி விஜய் பதிவிட்ட செல்பி புகைப்படம் ஒன்று இந்திய அளவில் அதிகமாக ரீ-டுவீட் செய்யப்பட்ட பதிவு என்ற சாதனையையும், சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்தின் #SooraraiPottru ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாம் பிடித்ததையும் டுவிட்டர் வெளியிட்டது.
இதையடுத்து விஜய் ரசிகர்கள் '#VIJAYRuledTwitter2020' என்ற ஹேஷ்டேக்கை தற்போது டிரென்டிங்கில் கொண்டு வந்துள்ளனர். அதற்குப் போட்டியாக சூர்யா ரசிகர்கள் #SURIYARuledTwitter2020' என்ற ஹேஷ்டேக்கை போட்டியாகக் கொண்டு வந்துள்ளனர்.
இரு ரசிகர்களுக்கும் இடையே தற்போது காரசாரமான மோதல் நடந்து வருகிறது.