சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தென்னிந்திய மொழிகளில் அந்தந்த மொழிகளில் நடிக்கும் நடிகைகளுக்கு அவர்கள் கேட்கும் நியாயமான சம்பளத்தைக் கூட சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தர மறுப்பார்கள்.
ஆனால், பாலிவுட்டிலிருந்து வரும் ஹிந்தி நடிகைகள் என்றால் அவர்களுக்கு அதிக சம்பளம் மட்டுமல்லாமல், அவர்களுடைய உதவியாளர்களுக்கும் சேர்த்து எவ்வளவு வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள்.
தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பில் ஹிந்தி நடிகையான ஆலியா பட் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
அவர் படப்பிடிப்புக்கு வரும் ஒவ்வொரு நாளும் அவருடன் உதவியார்கள் என்ற வகையில் 10 பேர் வருகிறார்களாம். அவர்களுக்கு சம்பளம் தனி, அதோடு அவர்களுடைய ஒரு நாள் செலவாக 1 லட்சத்திற்கும் மேல் கொடுக்கப்படுகிறதாம்.
ஒரு மேனேஜர், ஒரு மேக்கப் உதவியாளர், ஒரு தனி உதவியாளர், ஒரு ஹேர்ஸ்டைலிஸ்ட், ஒரு காஸ்ட்டியூம் உதவியாளர், ஒரு கார் டிரைலவர், 4 பாதுகாவலர்கள் என 10 பேருடன்தான் ஆலியா படப்பிடிப்புக்கு வருவாராம்.