'லியோ' வியாபாரத்தை பரப்புவது விஜய்யா, தயாரிப்பாளரா ? | ஜெய்ப்பூரில் நடந்த 'எங்கேயும் எப்போதும்' சர்வானந்த் திருமணம் | இரண்டாம் பாகத்தில் மீண்டும் 'பையா' கூட்டணி ? | ‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! |
சந்தானம் ஹீரோவாக நடித்த பிஸ்கோத் படம், கடந்த மாதம் 14ந் தேதி தியேட்டரில் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. கொரோனா ஊரடங்கிற்கு பயந்து தியேட்டருக்கு மக்கள் வரத் தயங்கியதால் வசூலும் பெரிய அளவில் பாதித்தது.
இதை சமாளிக்க படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட முடிவு செய்தார்கள். அதன்படி தற்போது ஜீ5 என்ற ஓடிடி தளத்தின் ஜீபிளிக்ஸ் என்ற தளத்தில் படத்தை பார்க்கலாம். இதற்கு 99 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பிஸ்கோத் படத்தில் சந்தானம் ஜோடியாக அலிஷா பெரரி நடித்திருந்தார். இவர்களுடன் சவுகார் ஜானகி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.