சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
'நேரம், பிரேமம்' படங்களின் மூலம் மலையாளம், தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக செயல்படும் ஒருவர். நடிகர் ரஜினிகாந்த் நேற்று அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தபின் அவருடைய அரசியல் வருகையை ஆதரித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.
“சூப்பர் ஸ்டாரின் அரசியல் நுழைவுக்கு வாழ்த்துகள், ஒன் அன்ட் ஒன்லி சூப்பர்ஸ்டார்” என அவர் பதிவிட்ட கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் பலரும் லைக் செய்தும் நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ளனர்.
அதே சமயம் அவரிடம் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் ஒருவர், “கேரளாவில் இப்படி மம்முட்டி, மோகன்லால் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா” என்று கேட்டிருந்தார்.
“ஏன் மாட்டேன்” என்று பதிலுக்கு அல்போன்ஸ் கேட்டதற்கு, “கேரள மக்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள் என நினைக்கிறேன், அவர்கள் அரசியலையும், சினிமாவையும் கலக்க மாட்டார்கள்,” அவரிடம் கேள்வி கேட்டவர் மீண்டும் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு அல்போன்ஸ், “ஆமாம், அதனால்தான் மம்முட்டி, மோகன்லால் இருவரும் முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள் என நான் நினைக்கிறேன்,” என்று பதிலளித்திருந்தார்.
கேரளாவில் ஏற்கெனவே சில நடிகர்கள், நடிகைகள் அரசியலில் இறங்கி எம்எல்ஏ, எம்.பி. ஆகியிருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவிலிருந்து அரசியலில் இறங்கியுள்ள முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹான் போன்று மலையாள சினிமாவிலும் அவர்களது சமகால நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் அரசியலில் இதுவரை இறங்கவில்லை.