சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டிய படம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக ஒரு பரபரப்பு நிலவியது. அதன்பின் தயாரிப்பாளர்கள் தியேட்டர்களில் வெளியிடத்தான் விருப்பம், தியேட்டர்காரர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். தியேட்டர்காரர்களும் தங்களது சதவீதத்தை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரைலரை கிறிஸ்துமஸ் தினத்திலும், படத்தை பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஜனவரி மாதம் தியேட்டர்களுக்கான இருக்கை அனுமதி 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதத்திற்கோ அல்லது 100 சதவீதத்திற்கோ உயர்த்தப்படவும் வாய்ப்புள்ளதாம். கூடிய விரைவில் 'மாஸ்டர்' படம் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.