Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விமர்சனங்களில் கருணை காட்டுங்கள் : தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்

04 டிச, 2020 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Telugu-Producers-request

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு சமீபகாலமாக சமூக வலைத்தள பக்கங்கள், யூ டியூப் சேனல்கள், டுவிட்டர் மற்றும் முகநூலில் திரைப்படங்களை கடுமையாக விமர்சிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. திரைப்படங்களை திட்டி விமர்சனம் செய்வதன் மூலம் தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அல்லது கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார்கள். அந்த விமர்சனம் மூலம் சம்பந்தப்பட்ட படம் அடையும் துயரங்களை அவர்கள் அறிவதில்லை. இதனை தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் தனது ஆடியோ பதிவொன்றில் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஆண்டுக்கு 200 படங்கள் வந்தால் அதில் 190 படங்கள் தோல்வியடைகின்றன. இவற்றை சரியாக எடை போட முடியாத பத்திரிகையாளர்கள் அவற்றுக்கு ரேட்டிங் என்ற பெயரில் அவர்கள் போக்கில் ஒன்றைத் தருகின்றனர். உண்மையில் இந்த 190 தோல்விப் படங்களால்தான் சினிமாத்துறை வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மை நடக்கிறது.

ஆனால் படத்துக்கு வரும் கடுமையான விமர்சனங்களால் இயக்குநர்கள் அழிந்து போகின்றனர், தயாரிப்பாளர்களுக்கு அடுத்த படத்துக்கு யாரும் தேதி கொடுக்க மாட்டார்கள். எனவே இனி கடுமையான விமர்சனம் எழுதுபவர்கள் ரேட்டிங் கொடுக்கும் போது ஒரு புள்ளிகளுக்கு பதிலாக இரண்டு கொடுங்கள், இரண்டு புள்ளிகள் என்றால் மூன்று கொடுங்கள். அப்படிக் கொடுத்தால் தான் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விற்க முடியும்.

வெற்றிப் பட இயக்குநர், தயாரிப்பாளர்களை விட தோல்விப் பட இயக்குநர் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும். வியாபார கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் திரைப்படங்களே தயாரிக்க கூடாது. ஆனால் திரைப்படங்கள் மீது தாகம் கொண்டவர்கள் மட்டுமே தயாரிக்க முன் வருகிறார்கள். ஒரு தோல்விப் படத்துக்கு பின்னால்கூட 10 வருட உழைப்பு இருக்கிறது. அந்தப் படத்தின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். அதனால் பத்திரிகையாளர்கள் விமர்சனங்களில் கருணை காட்ட வேண்டும்.

பூரி ஜகன்னாத் கூறியிருக்கும் கருத்துகளை நாங்கள் வழிமொழிகிறோம். எனவே மேற்சொன்ன விஷயங்களை அனைத்து பத்திரிகையாளர்களும், சேனல்களும் கருத்திக் கொண்டு, தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு நடிகர் யதா கிருஷ்ணா காலமானார்தெலுங்கு நடிகர் யதா கிருஷ்ணா ... 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பில் ஆலியா பட் 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பில் ஆலியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in