Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயிகள் போராட்டம் உள்ளத்தை உலுக்குகிறது: கார்த்தி அறிக்கை

04 டிச, 2020 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Karthi-statement-regarding-Farmers-protest

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது உழவன் அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டில்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாகப் பங்கெடுத்துப் போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாகப் பிரமிப்பூட்டுகிறது.

நாளும், பொழுதும் பாடுபட்டால் தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு, கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப் பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.

தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளைப் பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உழவர் சமூகம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாகப் பாதிப்படைவோம் எனக் கருதுகிறார்கள்.

தங்கள் மண்ணில் தங்களுக்கிருக்கும் உரிமையும், தங்கள் விளைப் பொருட்கள் மீது தங்களுக்கிருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றும் செய்யப்பட்டுவிடும் என்றும், ஆகவே இந்தச் சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

ஆகவே, போராடும் விவசாயிகளின் குரலுக்குச் செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு. அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு கார்த்தி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் ... கன்னிராசிக்கு தடை நீங்கியது கன்னிராசிக்கு தடை நீங்கியது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
05 டிச, 2020 - 01:58 Report Abuse
Anbu Tamilan Without knowing anything, this fool is sing message to Central Govt. We know his family.
Rate this:
04 டிச, 2020 - 21:42 Report Abuse
Ranjit Kumar ஒரு விழாவில் தமிழர்களை விட தெலுங்கு மக்களை பிடிக்கும் என சொன்ன இவர். Youtube-l search seiyungal.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
04 டிச, 2020 - 17:00 Report Abuse
Bhaskaran Santhadi saakil Neeyum arasiyalukku vaariya .kullan erkanave vantha maathiri thaan
Rate this:
Rajesh - Delhi,யூ.எஸ்.ஏ
04 டிச, 2020 - 14:11 Report Abuse
Rajesh எவனோ எழுதி கொடுத்ததை வசனம் பேசிட்டு போகவேண்டியது அப்பறம். உண்மை என்னன்னு தெரியாம இவரு பேசிடுவாரு....
Rate this:
04 டிச, 2020 - 13:13 Report Abuse
கணபதி மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது. அதற்குள் ஏன் அவசரம். மற்ற மாநில விவசாயிகள் போராடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in