சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா, பின்பு அங்கு ஹீரோயினாகவும் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் புகழ்பெற்றார். அதன்பிறகு வெள்ளக்காரதுரை, காக்கி சட்டை, இஞ்சி இடுப்பழகி, ஈட்டி, பெங்களூரு நாட்கள், காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவதிற உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஸ்ரீதிவ்யா நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்கள்தான் அப்படி இருந்தும் திடீரென அவரது கேரியரில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. 2017க்கு பிறகு அவருக்கு படம் எதுவும் இல்லை. அவர் நடித்து முடித்துள்ள ஒத்தைக்கு ஒத்த படமும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் இப்போது கவுதம் கார்த்தி ஜோடியாக நடிக்க புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இதில் கவுதம் கார்த்திக் வடசென்னை இளைஞனாகவும், ஸ்ரீதிவ்யா பிசியோதெரபிஸ்ட் டாக்டராகவும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இந்த மாதம் தொடங்குகிறது. வடசென்னை, கேரளா, ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் நடக்கிறது.