சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
பிரபல தெலுங்கு நடிகர் யதா கிருஷ்ணா. குப்த சாஸ்திரம், சங்கராந்தி அல்லுடு, வயசுகோரிகா, பிக்னிக் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
61 வயதான யதா கிருஷ்ணா, ஐதராபாத் நிஜாம் பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார். யதா கிருஷ்ணாவுக்கு ரமாதேவி என்ற மனைவியும், சுரேஷ், லட்சுமண் என்ற மகன்களும் சுஜனா என்ற மகளும் உள்ளனர்.