சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமான ஒரு நடிகராக இருப்பவர் விஜய். அவர் நடித்து வெளிவர உள்ள மாஸ்டர் படம் வந்தால்தான் தியேட்டர்களுக்கு மக்களை மீண்டும் வரவழைக்க முடியும் என ஒட்டு மொத்த திரையுலகமும் தற்போது நினைப்பது தான் அவருடைய இந்த 28 வருட கால வளர்ச்சி.
1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி அவர் நாயகனாக நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு வெளிவந்தது. முதல் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அதற்கடுத்த சில படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார் விஜய்.
1996ம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக படத்திற்குக் கிடைத்த வெற்றி அவரை வேறு ஒரு இமேஜுக்குள் கொண்டு சேர்த்தது. 1997ம் ஆண்டில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்தது.
ஒரு நடிகருக்கு வரும் வெற்றியும், தோல்வியும் அவருக்கு வந்ததும் உண்டு. தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வந்து தொடர் வெற்றிகளால் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா வியாபார வட்டத்தில் மாநிலங்களைக் கடந்தும், நாட்டைக் கடந்தும் தனக்கென ஒரு தனி வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த 28 வருடங்களாக தமிழைத் தவிர வேறு எந்த மொழிகளிலும் அவர் நடிக்கவில்லை என்பது எவ்வளவு ஆச்சரியமான உண்மை. விஜய்யின் 28வது வருட சினிமா கொண்டாட்டத்தை அவருடைய ரசிகர்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.