சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ்(62) திருச்சியில் காலமானார். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயசித்ரா, குழந்தை நட்சத்திரமாக குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் கே.பாலசந்தரின் அரங்கேற்றம் படம் அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் அம்ரேஷ், முதலில் நடிகனாக களமிறங்கினார். இப்போது இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
ஜெயசித்ராவின் கணவர் கணேஷ், மாரடைப்பால் திருச்சியில் இன்று(டிச., 4) காலமானார். கும்பகோணத்தில் பிறந்த அவர் ஒரு படத்தில் நடித்துள்ளார். அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.