சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
அறிமுக இயக்குனர் செல்வேந்திரன் இயக்க, நீலிமா ராணி, ஜார்ஜ் விஜய் நெல்சன், மரியா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடிக்கும் கருப்பங்காட்டு வலசு படம், திருப்பூர், பல்லடத்தில் உள்ள, மாதாப்பூர் கிராமத்தில், 21 நாட்களில் படமாக்கப்பட்டு உள்ளது.தயாரிப்பாளர் எபினேசர் தேவராஜ் மற்றும் நண்பர்கள் குழு இணைந்து, படத்தை தயாரித்து உள்ளனர். முக்கிய பாத்திரத்தில், எபினேசரும் நடித்துஉள்ளார்.
படம் குறித்து செல்வேந்திரன், எபினேசர் கூறியதாவது: ஒரு கிராமத்தை, பசுமையுடன் கூடிய, நவீன கிராமமாக்க எடுக்கும் முயற்சியில், சில தடை வருகிறது. அத்துடன் நிகழும் சில கொலைகளுக்கான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில், நவீனம் எவ்வாறு பயன்படுகிறது என்பதே படத்தின் கதை.மாதாப்பூர் கிராமத்தினர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. எங்களை பிள்ளைகள் போல் கவனித்தனர். மாதாப்பூர் கிராமத்தினர் மட்டுமல்ல, படத்தை பார்க்கும் அனைவரும், இனி வரும் காலங்களில், நமக்கு எது தேவை என்பதை உணர்வர். படம் இந்த வாரம் வெளியாகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.