சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தெலுங்கு திரையுலகில் கடந்த 45 வருடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கே.ராகவேந்திர ராவ். கடந்த சில ஆண்டுகளாக, டைரக்ஷனில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான தணிகலபரணி இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் ராகவேந்திரா ராவ்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மனைவி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.. மேலும் சமந்தா மற்றும் ஸ்ரேயா ஆகியோர் கெஸ்ட் ரோல்களில் நடிக்க உள்ளார்கள். இதுதவிர, ராகவேந்திர ராவின் மகளாக இன்னொரு கதாநாயகியும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அரசு ஊழியராக நடிக்கிறாராம் ராகவேந்திர ராவ். கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் தந்தையாக நடித்த தணிகலபரணி தான் இந்தப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.