சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
மலையாள சினிமாவில் 90களில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ் கோபி. மலையாள நடிகர்களில் அதிக படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி, அரசியல் கட்சியில் சேர்ந்து, கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கும் சுரேஷ்கோபி, தற்போது, 'காவல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் இளைஞர், வயதானவர் என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் சுரேஷ்கோபி.
சுரேஷ் கோபியின் பல படங்களுக்கு, ஆஸ்தான கதாசிரியராக விளங்கிய ரெஞ்சி பணிக்கர் என்பவரின் மகனான நிதின் ரஞ்சித் பணிக்கர் தான், இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே, மம்முட்டியை வைத்து, 'கசபா' என்கிற, சர்ச்சைக்குரிய போலீஸ் படத்தை இயக்கியவர். காவல் படம் குறித்து இயக்குனர் நிதின் கூறும்போது, “சுரேஷ்கோபி சமீபத்தில் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும், இந்த காவல் படத்தில் 90களில் பார்த்த, அதே ஆக்சன் கிங் சுரேஷ்கோபியை மீண்டும் ரசிகர்கள் பார்க்கலாம்” என உறுதி அளித்துள்ளார்.