Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம்

03 டிச, 2020 - 18:32 IST
எழுத்தின் அளவு:
Honoured-to-Sonu-sood

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக, கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்களுக்கு, தனது சொந்த செலவில் உதவிக்கரம் நீட்டி வருகிறார். சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த தொழிலாளர்களை தனித்தனி பேருந்துகளில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். கல்வி கற்க பணவசதி இல்லாத மாணவர்களுக்கு படிப்பு செலவு, மொபைல் போன் உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்தார். பலருக்கு மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்தார்.

இந்த நிலையில் இவரது தன்னலம் கருதாத சேவைகளை கவுரவப்படுத்தும் விதமாக, ஆந்திராவில் உள்ள சரத்சந்திர ஐஏஎஸ் அகாடமி, சரத்சந்திர கல்லூரி, சரத்சந்திர ஜூனியர் கல்லூரி ஆகியவற்றில், ஒரு துறைக்கு சோனு சூட்டின் பெயரை சூட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி சோனு சூட் கூறும்போது, “இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.. மற்றவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். தற்போது இவ்வளவு பெரிய கல்வி நிறுவனம், எனது செயல்களை கவுரவப்படுத்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வரலட்சுமியின் இன்ஸ்டா, டுவிட்டர் பக்கங்களை ஹேக் செய்த மர்மநபர்கள்வரலட்சுமியின் இன்ஸ்டா, டுவிட்டர் ... பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண்? பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in