சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
சமூக ஊடகங்களில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வரக்கூடியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். பல லட்சம் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நேற்றிரவு இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட எனது சமூக ஊடக கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுவிட்டன. என்னால் இன்னும் அவற்றை அணுக முடியவில்லை. செயலி குழுக்களுடன் இணைந்து எனது கணக்குகளை மீட்டெடுக்கும் பணியில் நான் ஈடுபட்டுள்ளேன். கூடிய விரைவில் எனது கணக்குகளை மீட்டுவிடுவேன். ஆனால் அதற்கு சில நாட்கள் ஆகலாம்.
எனவே என்னை பின் தொடர்பவர்கள் தயவுசெய்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்க விரும்புகிறேன். அடுத்த சில நாட்களுக்கு எனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் இருந்து வரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம்.
எனது கணக்குகளை மீண்டும் இயக்க தொடங்கியதும் நானே அறிவிக்கிறேன். உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். விரைவில் மீண்டும் ஆன்லைனில் உங்களை எல்லாம் சந்திக்கிறேன்", என அவர் தெரிவித்துள்ளார்.