சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
சென்னை : கொடுத்த வாக்கை தவற மாட்டேன், தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் மகிழ்ச்சியே என நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாகவும், டிசம்பர் 31ல் அறிவிப்பு வெளியாகும் என டுவிட்டரில் பதிவிட்ட ரஜினி, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் எழுச்சி வரணும். எழுச்சியை உண்டாக்க வேண்டும். அதன் பிறகு தான் கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனாவால் முடியவில்லை. எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது உங்களுக்கு தெரியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், சுற்றுப்பயணம் செல்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
தமிழக மக்கள் பிரார்த்தனை, வேண்டுதலால் ஒருமுறை உயிர் பிழைத்து வந்தேன். இப்போது, அவர்களுக்காக என் உயிரே போனால் கூட என்னை விட சந்தோஷப்படுபவர் வேறு யாரும் கிடையாது. கொடுத்த வாக்கை என்றைக்கும் மறக்க மாட்டேன். அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். அது காலத்தின் தேவை. அரசியல் மாற்றம் வந்தே ஆக வேண்டும். நிச்சயம் மாற்றம் பிறக்கும். நான் வெற்றியடைந்தால் அது மக்களுடைய வெற்றி. நான் தோல்வியடைந்தால் மக்களின் தோல்வி. மாற்றத்திற்கு எல்லாரும் துணையாக நிற்க வேண்டும். எல்லாத்தையும் மாற்ற வேண்டும்.
கடினமாக உழைத்து நம்மால் என்ன முடியுமோ அதை செய்து, எனது பாதையில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அண்ணாத்த படத்தை முடித்து கொடுப்பது என் கடமை. அது முடித்துவிட்டு கட்சி பணியை ஆரம்பிப்பேன். ஒவ்வொரு நாட்டிற்கும் தலையெழுத்து உள்ளது. தமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அது நிச்சயம் நடக்கும். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இப்போது இல்லைனா எப்போதும் இல்லை. மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம். ஜனவரியில் ஆரம்பிக்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி இருப்பர் என்றார்.