சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என கூறி வந்த ரஜினி ஒருவழியாக ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருபெரும் அரசியல் ஆளுமைகளான முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின் ஒரு வெற்றிடம் ஏற்பட்டதாக கூறிய ரஜினி, அரசியல் இறங்கபோவதாக அறிவித்தார். பின்னர் பல்வேறு காலக்கட்டங்களில் தனது அரசியல் நிலைப்பாட்டில் சில குழப்பங்களுடன் முன்வைத்தார். சில வாரங்களுக்கு முன் உடல்நிலையை கருத்தில் ரஜினி அரசியலில் இறங்கமாட்டார் என பொய்யான அறிக்கை அவர் பெயரில் வெளியானது. அந்த அறிக்கை என்னுடையது அல்ல, ஆனால் அதில் சொல்லப்பட்ட விஷயம் உண்மை என்றார் ரஜினி. இதனால் அவர் அரசியலில் இறங்கமாட்டார் என கூறப்பட்டது. இந்த சமயத்தில் சில தினங்களுக்கு முன் திடீரென தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார். எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் டுவிட்டரில் ரஜினி இன்று(டிச.,3) வெளியிட்ட பதிவு : ''வருகின்ற சட்டசபை தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதியம்.... நிகழும்!! என குறிப்பிட்டு, ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம். #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல.'' என பதிவிட்டுள்ளார்.