முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் புஷ்பா படம் கடந்த மாதம் ஆரம்பமானது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி காடுகளில் ஆரம்பமான படப்பிடிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தினமும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கொரானோவைக் கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழுவினர் பின்பற்றிலும் அதிகப்படியான கூட்டத்தின் காரணமாக சுமார் 10 பேர் வரை கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ளனராம். அதை உறுதி செய்த பின் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். படப்பிடிப்பிலிருந்து அல்லு அர்ஜுனும் உடனடியாக ஹைதராபாத் திரும்ப உள்ளாராம்.
ஆந்திர மாநிலத்தில் நடக்கும் செம்மரக்கடத்தல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது எனக் கூறப்படுகிறது. படத்தில் மரத்தை வெட்டும் தமிழராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது.