திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் | சண்டை கலைஞர்களை தேர்வு செய்கிறது யூனியன் | சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' | மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய தமன் குமார் | தலை பாரத்தை இறக்கி வைத்த சிவகார்த்திகேயன் | கமலும் அர்ஜுனும் லாலிபாப் தான் சாப்பிட்டார்களா ? துல்கர் பட இயக்குனர் கிண்டல் |
தமிழில் வால்மீகி படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா நந்தன். அதன்பிறகு, அய்யனார், சண்டமாருதம், சூரியநகரம் படங்களில் நடித்தார். தமிழில் அதிக வாய்ப்பு இல்லாமல் மலையாள படங்களில் நடித்தார். அங்கும் வாய்ப்பு குறையவே துபாய் சென்ற அவர் அங்கு நடத்தப்படும் மலையாள எப்.எம் சேனலில் ஜாக்கியாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் தனது 30வது பிறந்த நாளை கொண்டாடிய அவர், அதுப்பற்றி மனம் திறந்து கூறியிருப்பதாவது: 30 வயதில் எனது 20வது வயதை, முழு மனதுடன் திரும்பிப் பார்க்கிறேன். அதில் அதிகம் கற்றுக் கொண்டேன். பல முதல் அனுபவங்களை அனுபவித்தேன். அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன். நடிப்பு வாழ்க்கையை தொடர்ந்தேன். பிறகு ரேடியோ ஜாக்கியாக துபாய்க்கு வந்தேன். இதை முழுவதும் நேசிக்கிறேன். சொந்தமாக வாழ்ந்து என் சுதந்திரத்தின் அன்பை கண்டேன்.
காதலில் விழுந்தேன். பின் வேதனை அடைந்தேன். முதலில் என்னை நேசிக்கக் கற்றுக் கொண்டேன். என்னவாக இருந்தாலும் முதலில் குடும்பம் என்பதை அறிந்துகொண்டேன். கொரோனா தொற்று மறைந்து நல்ல நாட்கள் திரும்பும்போது பிறந்த நாள் நன்றாக இருந்தது. 30வது பிறந்த நாள் இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு மீரா நந்தன் கூறியுள்ளார்.