Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

யாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி

03 டிச, 2020 - 11:22 IST
எழுத்தின் அளவு:
sushanth-and-ria-chakrabarthy-are-top-in-yahoo-search

கூகுள் போன்று யாகூ தளம் 2020ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வளர்ந்து வந்த நிலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்தின் பெயர் முதலிடம் பெற்றுள்ளது. அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மூன்றாவது இடம் பெற்றுள்ளார்.


கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடுமையான மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இதன் காரணமாகவே சுஷாந்த் அதிகம் தேடப்பட்டிருக்கிறார்.


ரியா சக்ரவர்த்தி சுஷாந்த் தற்கொலை வழக்கு, மற்றும் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாகவே இவரையும் அதிகமானோர் யாகூவில் தேடி உள்ளனர். அதிகம் தேடப்பட்ட பெண் பிரபலங்களின் பட்டியலில் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரோ ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ரியா சக்ரவர்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை கங்கணா பிடித்துள்ளார்.


இந்தப் பட்டியலில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ... சன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ் சன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in