மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
'அட்டகத்தி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித்திற்கு அறிமுகப்படத்தை விடவும் இரண்டாவதாக இயக்கிய 'மெட்ராஸ்' தமிழ் சினிமாவில் ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தது. அதற்கடுத்து மற்ற இளம் இயக்குனர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ரஜினிகாந்த் நாயகனாக நடித்த 'கபாலி, காலா' படங்களை இயக்கினார்.
தற்போது ஆர்யா, துஷாரா மற்றும் பலர் நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டு பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
படம் பற்றி அவர்கள் அனுப்பிய பத்திரிகைச் செய்தியில் படத்தின் நாயகி அறிமுகம் என்றும், பா.ரஞ்சித் கொடுத்த ஒரு பேட்டியில் நாயகி புதுமுகம் என்றும் பொய் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படத்தில் நாயகியாக நடிக்கும் துஷாரா கடந்த வருடம் வெளிவந்த 'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் ஏற்கெனவே கதாநாயகியாக அறிமுகமானவர்தான். ஏற்கெனவே அறிமுகமான ஒரு நடிகையை இந்தப் படத்தில்தான் அறிமுகம், புதுமுகம் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்.
'போதை ஏறி புத்தி மாறி' படம் வெற்றி பெறாத படம் என்பதால் அதை மறைத்துவிட்டு இந்தப் படத்தில் அறிமுகம் என்று சொல்கிறார்களோ. அந்தப் படத்திலேயே ஓரளவிற்கு கவனிக்கப்பட்டவர்தான் துஷாரா.
திண்டுக்கல்லை சொந்த ஊராகக் கொண்ட துஷாரா மாடலிங்கிலிருந்து சினிமாவிற்கு நடிக்க வந்தவர். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்துத்தான் அவருக்கு முதல் படமான 'போதை ஏறி புத்தி மாறி' பட வாய்ப்பு வந்தது.
'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். முதல் படத்தில் ஓரளவிற்கு கவனிக்கப்பட்டவருக்கு இந்த இரண்டாவது படம் அனைவரது கவனத்தை ஈர்க்கும் படமாக அமையலாம்.