'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பரபரப்பாக படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தொடர்ந்து தனது சமூகவலைதளப் பக்கத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் பிகினியில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கலர் புல்லான அந்த பிகினியின் மீது மற்றொரு ஆரஞ்சு வண்ண துணியை அவர் கட்டியுள்ளார். கூடவே அந்தப் புகைப்படத்துடன், இந்தப் புகைப்படத்திற்காக உங்கள் லுங்கியைத் திருடியதற்கு மன்னியுங்கள் என தயாரிப்பாளர் ரேயன் ஸ்டெபனிடம் கேட்டுக் கொண்டுள்ளார் ஸ்ருதி.
இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள ரேயன், நீயே வைத்துக் கொள் ஸ்ருதிம்மா எனத் தெரிவித்துள்ளார். ஸ்ருதியின் இந்தப் புகைப்படம் மிகவும் ஹாட்டாக இருப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் பாராட்டியுள்ளார்.
ஸ்ருதியின் இந்தப் புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சங்கள் லைக்குகளைக் குவித்து வருகிறது.
இந்தாண்டு தொடக்கத்தில் ஸ்ருதி நடிப்பில் வெளியான தேவி குறும்படத்தை தயாரித்தவர் ரேயன் என்பது குறிப்பிடத்தக்கது.