மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவின் வாரிசான, ஜுபில் ராஜன் பி.தேவ், பியா என்ற படம் மூலம், தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இப்படம், நாளை வெளியாகிறது. படத்தை, அறிமுக இயக்குனர் ராஜ்கோகுல் தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மேலும், முக்கிய பாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.எட்டுத்திக்கும் பற படத்தில் நடித்த சமிக் ஷா, சாவந்திகா, பியா அலெக்சாண்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இது குறித்து, இயக்குனர் ராஜ் கோகுல் தாஸ் கூறியதாவது:கேரளாவுக்கு கந்துவட்டி கொடுக்க செல்லும் நாயகன், காதல் வலையில் விழுகிறார். காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், காதலியின் தோழியுடன் சொந்த ஊர் திரும்பும்போது, அடர்ந்த காட்டுப்பகுதியில் சிக்கிக் கொள்கின்றனர்.அங்கு நடக்கும் மர்ம கொலையும், அதற்கான பின்னணியுமே படத்தின் கதை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியோடு, படத்தை நானே தயாரித்து உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.