துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக இருக்கிறார். தேவராட்டம் படத்திற்கு பின் அவர் கைவசம் சிம்பு உடன் நடிக்கும் கன்னட ரீ-மேக்கான முப்டி மட்டுமே உள்ளது. இதுதவிர சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கவுதம் கார்த்திக்கின் மொபைல் போனை, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.