சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தற்போது நடந்து வரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை பவித்ரா புனியா. ஏ ஹை மொஹப்பதைன், நாகினி 3 உள்பட பல தொடர்களில் நடித்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தான் காதலிக்கும் ஒருவரை விரைவில் திருமணம் செய்யப் போகிறேன் என்றும் கூறி வந்தார். சக போட்டியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பவித்ரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்திருக்கும் நிலையில், சுமிஷ் மகேஷ்வர் என்ற ஓட்டல் தொழில் அதிபர், பவித்ரா புனியா எனது மனைவி திருமணத்தை மறைத்து பல்வேறு மோசடிகளில் பவித்ரா ஈடுபட்டு வருகிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : எனக்கும், பவித்ராவுக்கு ம் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நடிப்பு வாய்ப்பு பாதிக்கும் என்பதால் திருமணம் பற்றி வெளியில் தெரிய வேண்டாம் என்று கூறியிருந்தார். அதனை நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார். ஒரு நடிகருடன் ஓட்டலில் நெருக்கமாக இருந்ததை பார்த்து நான் கண்டித்தேன். ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை.
இப்போது பிக்பாஸ் வீட்டில் எனக்கு திருமணமே ஆகவில்லை என்று கூறியிருக்கிறார். பவித்ரா சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. என்னை விவாகரத்து செய்து விட்டு அவர் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளட்டும். என்று கூறியிருக்கிறார்.