மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் சில பிரம்மாண்டமான முக்கிய படங்கள் வெளிவந்தன. இந்திய அளவில் அந்தப் படங்கள் வெளியாகி தென்னிந்திய மொழி சினிமாக்களையும் உலக அளவில் மேலும் அடையாளப்படுத்தி வருகின்றன.
கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் இந்திய அளவில் கன்னட சினிமாவை பேச வைத்தது. அப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது.
தற்போது 'கேஜிஎப் 2' படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் நடந்து வருகிறது. அப்படத்திற்குப் பிறகு அதன் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படமான 'சலார்' படத்தின் முதல் பார்வை வெளியீடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியானது.
பிரபாஸ் தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து 'ஆதி புருஷ்', மற்றும் 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். தற்போது மூன்றாவதாக 'சலார்' படமும் இணைந்துள்ளது.
'சலார்' படத்தின் படப்பிடிப்பு 2021 ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களின் படங்களிலும் பிரபாஸ் நடிக்க உள்ளார்.