Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டி.ஆர் ஆரம்பிக்கும் தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்

02 டிச, 2020 - 11:25 IST
எழுத்தின் அளவு:
T-Rajendar-starts-news-producers-association

தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்களுக்காக ஏற்கெனவே நான்கு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சங்கம் (கில்டு), தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என நான்கு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்தான் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கான முக்கிய சங்கமாக இருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த சங்கம் தனி அலுவலர் மூலம் செயல்பட்டதால் சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை என சில தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2020-22ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தோல்வியுற்ற டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டினர். அவர்கள் விரைவில் புதிய சங்கத்தை ஆரம்பிக்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் அவர்கள் தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை பதிவு செய்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஒரே ஆண்டில் ஒரு முக்கியமான சங்கம் மூன்றாகப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சேனல் துவக்கும் விஜய்!சேனல் துவக்கும் விஜய்! அந்த இடத்தில் இப்படி ஒரு டாட்டூவா? அந்த இடத்தில் இப்படி ஒரு டாட்டூவா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
03 டிச, 2020 - 11:57 Report Abuse
Matt P இவரு பேசினதை விடீயோவில பாத்தேன். கடவுளை தான் நம்புராவுகளாம் கரோனாவை நம்பலையாம். இவரும் மாஸ்க் அணியவில்லை. கூடியிருந்தவர்களும் அணியவில்லை. அதிலும் உணர்ச்சிவசப்பட்டு அடுக்குமொழியில விடும்போது கரோனா இருந்தா லபக்குனு வெளியே வந்துராதா? பொதுவாழ்வுக்கு வந்துட்டா உதாரணமா இருக்க வேண்டாமா? கூடியிருந்தவர்கள் வாழ்க்கியையும் நினைத்து பார்க்க வேண்டாமா? ..தமிழ் தமிழ் என்று பேசி இங்கிலீஷுல சங்கத்துக்கு பேர் வைச்சாச்சு.
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
03 டிச, 2020 - 08:26 Report Abuse
VENKATASUBRAMANIAN எல்லாம் பதவி பணம் படுத்தும்பாடு
Rate this:
Mohan - Thanjavur ,இந்தியா
02 டிச, 2020 - 22:24 Report Abuse
Mohan MOO VI - MOODI VIDUNGAL.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
02 டிச, 2020 - 22:16 Report Abuse
கல்யாணராமன் சு. எப்பிடியோ, சினிமா ஒழிஞ்சா சரி.......... எப்போ நடக்குமோ ??
Rate this:
K RAGHAVAN - chennai,இந்தியா
02 டிச, 2020 - 15:42 Report Abuse
K RAGHAVAN they want some post so they it. But no use at all only for letter pad
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in