Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா - போட்டோ வைரல்

01 டிச, 2020 - 20:33 IST
எழுத்தின் அளவு:
Anushka-Sharma-shirshasan-photo-goes-viral

கர்ப்பகாலத்தில் கணவர் கோஹ்லி உதவியுடன் நடிகை அனுஷ்கா சர்மா 'சிரசாசனம்' செய்யும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி 31. இவரது மனைவி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இந்த தம்பதிக்கு புத்தாண்டில் குழந்தை பிறக்கவுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி, முதல் டெஸ்ட் முடிந்த பின் இந்தியா திரும்புகிறார். இதனிடையே, கர்ப்ப காலத்தில் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று 'சிரசாசனம்' செய்ய, அவருக்கு கோஹ்லி உதவும் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதனை 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்ட அனுஷ்கா சர்மா கூறியது: ''எனது வாழ்க்கையில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. தலைகீழாக நின்று, கால்கள் மேலே வைத்து செய்யும் சிரசாசனம் கடினமானது. இதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். தற்போது கர்ப்ப காலத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி செய்கிறேன். முன்பு சுவற்றின் உதவியால் செய்வேன். இப்போது கூடுதல் பாதுகாப்பிற்காக கணவர் கோஹ்லி உதவுகிறார். எனது யோகா ஆசிரியர் காணொளி மூலம் பயிற்சிகளை மேற்பார்வையிட்டார். கர்ப்ப காலத்திலும் யோகா பயிற்சிகளை தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ... சந்தானத்தின் பாரீஸ் ஜெயராஜ்! சந்தானத்தின் பாரீஸ் ஜெயராஜ்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in