"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
'எல்கேஜி' படத்தில் நாயகனாக நடித்து கிடைத்த வரவேற்பிற்குப் பின் ஆர்ஜே பாலாஜி, 'மூக்குத்தி அம்மன்' படத்தை சரவணன் என்பவருடண் இணைந்து இயக்கினார். அப்படம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகியது.
படத்தில் இந்து சாமியார்களை மோசமாக சித்தரித்து எடுத்திருந்ததால் படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், படத்தில் கிறிஸ்துவ மத பிரசங்கத்தைக் கிண்டலடிக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட காட்சியை மட்டும் நீக்கிவிட்டார்கள். ஒரு மதத்தை மட்டும் கிண்டலடிப்பதை சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என சமூக வலைத்தளங்களிலும் இப்படத்திற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்தது.
இதனிடையே, ஓடிடியில் வெளியான இப்படம் வெற்றி பெற்று விட்டது என தனது படக்குழுவினருக்கும், நண்பர்களுக்கும் சக்சஸ் பார்ட்டி வைத்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. அந்த பார்ட்டி புகைப்படத்தை இப்படத்தின் எடிட்டிரான ஆ.ர்.கே.செல்வா அவருடைய டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படம் ஒரு பக்திப் படம். இதில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அசைவ உணவுகளைக் கூட நயன்தாரா சாப்பிடவில்லை என்றெல்லாம் செய்தியைப் பரப்பினார்கள். ஆனால், சக்சஸ் பார்ட்டியில் சரக்கு, அசைவ உணவுகள் என கொண்டாடியிருக்கிறார்கள்.
சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இப்படக்குழுவினர் நடந்து கொள்வது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.