Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு படத்தை இயக்கப் போகும் 'சில்லுனு ஒரு காதல்' இயக்குனர் ?

30 நவ, 2020 - 17:58 IST
எழுத்தின் அளவு:
Simbu-movie-to-be-direct-by-Sillunu-Oru-Kadhal-director

கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'முப்டி'. இப்படத்தை தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க கன்னடப் படத்தை இயக்கிய நார்தன் இயக்க கடந்த வருடம் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள்.

கர்நாடகாவில் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து சிம்பு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினார். தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்கும் தகராறு என்று ஒரு பக்கமும், இயக்குனர் நார்தனுக்கும் சிம்புவுக்கும் தகராறு என்று மற்றொரு பக்கமும் தகவல்கள் உலவின.

சில மாதங்களுக்கு முன்பு அப்படத்திற்கான பஞ்சாயத்து நடைபெற்று மீண்டும் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், முதலில் படத்தை இயக்கிய நார்தன் படத்தை மீண்டும் இயக்க விருப்பமில்லை எனச் சொல்லிவிட்டு விலகிவிட்டாராம்.

கடந்த வாரம் கிடைத்த தகவல்படி நந்தா பெரியசாமி இயக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்படி சூர்யா, ஜோதிகா நடித்த 'சில்லுனு ஒரு காதல்', இந்த சீசன் பிக்பாஸ் போட்டியாளரான ஆரி நடித்த 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கப் போகிறாராம். மீண்டும் இதில் ஒரு மாற்றம் வருமா அல்லது இவரேதானா என்பது விரைவில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் - கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதில் காரசாரமில்லையா?பிக்பாஸ் - கமல்ஹாசன் தொகுத்து ... மாலத்தீவு கடற்கரையில் ஸ்விம் சூட்டில் வேதிகா மாலத்தீவு கடற்கரையில் ஸ்விம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in