திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் | லண்டனில் 1540 கிலோமீட்டர் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்த ஆர்யா | பிரமாண்டமாக நடைபெறும் வெந்து தணிந்தது காடு இசை வெளியீடு | 'ஜகமே தந்திரம்' பற்றி 'கிரே மேன்' இயக்குனர்கள் கருத்து | ஜெயம் ரவி படத்தை முடித்த நயன்தாரா | சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது | புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா |
விஷால் நடித்த ஆக்சன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாளக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தற்போது தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது மலையாளத்தில், கதையின் நாயகியை மையப்படுத்தி உருவாகும் 'குமரி' என்கிற படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி. லாந்தர் விளக்கை கையில் வைத்தபடி காட்டுக்குள் ஐஸ்வர்ய லட்சுமி நிற்கும் இந்தப்படத்தின் மோஷன் போஸ்டரே அசத்தலாக இருக்கிறது.
பிரித்விராஜை வைத்து, ரணம் என்கிற படத்தை இயக்கிய நிர்மல் சகாதேவ், என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்பட வாய்ப்பு கூட தனக்கு பிரித்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா மூலமாகத்தான் வந்தது என கூறியுள்ள ஐஸ்வர்யலட்சுமி, அவர்கள இருவருக்கும் இப்படி ஒரு கதையில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததற்காக தனது நன்றியை தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு இந்தப்படத்தின் கதையை கேட்ட பிறகு, அது ஏற்படுத்திய தாக்கத்தால் பல நாட்கள் தன்னுடைய இரவுகள் தூக்கமில்லாமல் கழிந்தன என கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.