சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது | சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு | எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி : இளையராஜா | கோயம்புத்தூரில் உருவான கேசினோ | கடைசி விவசாயி படைத்த புதிய சாதனை |
தமிழைப் போலவே தெலுங்கிலும் 'பிக் பாஸ் சீசன் 4' தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வருடம் தமிழில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தெலுங்கில் ஆரம்பித்துவிட்டார்கள். அங்கு 83வது நாளைக் கடந்துவிட்டார்கள். இன்று வார இறுதி நாளான ஞாயிறு நிகழ்ச்சியில் கன்னட நடிகரான கிச்சா சுதீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதற்கான புரோமோ சற்று முன்பு வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நாகார்ஜுனாவுடன்தான் சுதீப் பங்கேற்கிறார், வீட்டிற்குள் செல்லவில்லை. கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சுதீப் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. 2013ல் ஒளிபரப்பாக ஆரம்பித்த முதல் சீசனிலிருந்து இதுவரையிலும் ஒளிபரப்பான 7 சீசன் வரை சுதீப் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இன்று தெலுங்கு பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்வது பற்றி, “பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் எனக்கு, இன்று தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராகச் செல்வது மற்றொரு உணர்வு. எப்போதும் இளமையாக இருக்கும் நாகார்ஜுனா சாருடன் மேடையைப் பகிர்வதும், மேலும் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களுடன் பேசுவதும் கூடுதல் மகிழ்ச்சி. உங்கள் உபசரிப்புக்கு நன்றி சார்,” என சுதீப் குறிப்பிட்டுள்ளார்.