மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
மலையாள திரையுலகில் பிரித்விராஜ் நடித்த 'அமர் அக்பர் ஆண்டனி' படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தவர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நண்பரான இவர், திலீப்புடன் நடிகை கடத்தல் வழக்கு பிரச்சனையிலும் சிக்கியவர்.. சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே திலீப்பின் நெருங்கிய நண்பர்..
தற்போது திலீப் ககேரளாவிலும், அரபு நாட்டிலும் நடத்திவரும் 'தே புட்டு' என்கிற ஹோட்டல் கிளைகள் அனைத்திலும் இவர்கள் இருவரும் தான் பார்ட்னர்கள். தற்போது நாதிர்ஷா டைரக்சனில் திலீப்-ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள 'கேசு ஈ வீட்டிண்டே நாதன்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்தநிலையில் நாதிர்ஷாவின் மூத்த மகள் ஆயிஷாவுக்கும் தொழிலதிபர் பிலால் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகியோர் குடும்ப சகிதமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன் தங்களது குடும்ப விழா போல வந்திருந்த விருந்தினர்களையும் வரவேற்றனர். மணமகள் ஆயிஷாவும், திலீப்பின் மகள் மீனாட்சியும் கூட தங்களது தந்தையை போலவே உயிர்த்தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.