Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜை கடுமையாக விமர்சிக்கும் நாகபாபு

28 நவ, 2020 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Nagababu-slams-Prakashraj

ஆந்திர அரசியலில் நடிகர் பவன் கல்யாண் கடந்த சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. பவன் கல்யாண் தற்போது பாஜக ஆதரவு நிலையை எடுத்துள்ளார். அவரது ஜனசேனா கட்சிக்கும் பாஜகவிற்குமான நெருக்கத்தை யாராலும் உடைக்க முடியாது என பவன் கல்யாணின் சகோதரரான நாகபாபு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பவன் கல்யாண் ஒரு பச்சோந்தி' என நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்திருந்தார். அது தெலுங்குத் திரையுலகத்திலும், ஆந்திர அரசியலிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பிரகாஷ்ராஜின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாகபாபு டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,

“உங்களுக்கு அடுத்தவரைக் கிண்டல் மட்டுமே செய்யத் தெரியும். இந்த நாட்டிற்கும், ஆந்திராவிற்கும் பாஜக மற்றும் ஜனசேனாவால் மட்டுமே நல்லது செய்ய முடியும். எந்த சக்தியாலும் பாஜக மற்றும் ஜனசேனா நெருக்கத்தை உடைக்க முடியாது. பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை நீங்கள் எந்த அளவிற்கு தொந்தரவு செய்தீர்கள், ஒத்துக் கொண்ட தேதியில் வராமல் அவற்றை கேன்சல் செய்தீர்கள் என்பது இன்னும் ஞாபகம் இருக்கிறது. முதலில் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், பின்னர் தன்னலம் கருதாத மனிதரான பவன் கல்யாணை கிண்டல் செய்யுங்கள்.

நீங்கள் முன்பும், இப்போதும் பாஜக பற்றி எவ்வளவோ கிண்டல் செய்தீர்கள், ஆனால் அவர்கள் அது பற்றி ஒரு தவறான வார்த்தையையும் உதிர்க்கவில்லை. பாஜக ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்கிறது. மீடியா உங்களிடம் ஏதாவது கேட்டால் அதிலிருந்து நழுவி பயனற்ற கமெண்ட்டுகளைக் கொடுக்காதீர்கள்,” என பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர்-ஐச் சுற்றும் ஓடிடி குழப்பம் ?மாஸ்டர்-ஐச் சுற்றும் ஓடிடி குழப்பம் ? தனுஷ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஐஸ்வர்ய லட்சுமி தனுஷ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

M Ramachandran - Chennai,இந்தியா
04 டிச, 2020 - 22:03 Report Abuse
M  Ramachandran பிரகாஷ் ராஜ் ஒரு வெது வெட்டு. மத்திய அரசை தாக்கி அதன் மூலம் பெரிய ஆளாக காட்டிக்க பார்க்கும் மூன்றாம் தர அரசியல் வாதி.இவர் கமலஹாஸஸனுடன் சேர்த்துக்கொள்லாம்.சரியாக இருக்கும்.எதிர்ப்பு அரசியல்லால் முன்னுக்கு வரமுடியாது. மக்கள் தற்போது நஙகு விவரம் தெரிந்தவர்காளக யிருக்கிறார்க. இதை உணர்ந்து தன தொழிலில் கவனமும் முதல் போட்டவர்களுக்கு ஒத்துழைத்து நடக்க வேண்டும்.
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
30 நவ, 2020 - 17:23 Report Abuse
KavikumarRam பிரகாஷ் ஒரு தெளிவான மதமாற்ற கைக்கூலி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in