சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
இயக்குனர் அட்லீ தயாரிப்பில், விக்னராஜன் இயக்கத்தில் வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், குமார் நடராஜன், பூஜா, மீஷா கோஷல் மற்றும் பலர் நடித்த 'அந்தகாரம்' படம் சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.
அப்படத்தின் படக்குழுவினரை தன் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அதுப்பற்றி படத்தின் தயாரிப்பாளர் அட்லீ குறிப்பிடுகையில், “அந்தகாரம்' குழுவினர் கமல்ஹாசன் சாரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். எப்போதும் எங்களுடனும், எங்களுக்கு ஆதரவாகவும், இருப்பதற்கு மிக்க நன்றி சார். உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு எப்போதும் ம், எதையாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்றும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்” என்று நன்றி தெரிவித்துள்ளார்.
மூன்று மணி நேரப் படம், பொறுமையை சோதிக்கிறது, குழப்பமான திரைக்கதை என்று விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்தாலும் வித்தியாசமான முயற்சி என்று மறுபக்கம் பாராட்டுக்களும் வருகிறது.