சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகர்களில் ஒருவர் டாக்டர் ராஜசேகர். அவருக்குக் கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் சில நாட்கள் இருந்த ராஜசேகரின் உடல்நிலை ஒரு கட்டத்தில் மோசமடைந்தது. இருப்பினும் அவர் அதிலிருந்து மீண்டு நலமுன் வீடு திரும்பினார்.
அக்டோபர் மாதத்தில் தான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருந்தார் ராஜசேகர். ஆனால், கொரானோ பாதிப்பால் அது தள்ளிப் போனது. இந்நிலையில் ராஜசேகர் உடல்நலம் முன்பைப் போல இல்லாததால் அவரது குடும்பத்தினர் சில மாதங்களுக்கு அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டனராம்.
முழுமையாகக் குணமடைந்து உடல்நலம் வலிமையுடன் தேறிய பிறகு படப்பிடிப்பை ஆரம்பித்துக் கொள்ளலாம் என மருத்துவர்களும் ஆலோசனை தெரிவித்துள்ளார்களாம். அதனால், சில மாதங்களுக்கு நடிப்பிலிருந்து விலகி ஓய்வெடுக்கும் முடிவுக்கு ராஜசேகர் வந்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது ஆவேசமான ஆக்ஷன் நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் டாக்டர் ராஜசேகர் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.