சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தமிழ் சினிமாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. அவர் நடித்து முடித்துள்ள 'சதுரங்க வேட்டை 2, பரமபத விளையாட்டு, கர்ஜனை, ராங்கி' ஆகிய படங்கள் வெளிவர வேண்டி உள்ளது.
தற்போது தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்திலும், மலையாளத்தில் 'ராம்' படத்திலும் நடித்து வருகிறார். இவற்றிற்கு அடுத்து ஹிந்தியில் வெளிவந்த 'பிக்கு' படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷுஜித் சர்க்கார் இயக்கத்தில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் கான் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'பிக்கு'.
இப்படத்தின் ரீமேக் உரிமையை முன்னணி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் வாங்கியுள்ளாராம். தீபிகா கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கப் போகிறாராம். அமிதாப் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
அமிதாப் நடித்த 'பின்க்' படத்தின் ரீமேக்கான 'நேர் கொண்ட பார்வை' படத்தில் அஜித் நடித்தார். இந்த 'பிக்கு' படத்தின் ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.