பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் | படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் - ‛வாத்தி' டிரைலர் வெளியீடு |
கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததிலிருந்து, பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், ஒரு ரியல் ஹீரோவாகவே மாறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது, ஏழை விவசாயிக்கு ட்ராக்டர், மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், ஐஏஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், இன்னும் பலருக்கு மருத்துவ உதவி என இவரால் உதவி பெற்றவர்கள் பட்டியல் மிகப்பெரியது.
இந்தநிலையில் பீகாரில் இருந்து சோனு சூட்டை நேரில் பார்ப்பதற்காக அர்மான் என்கிற ரசிகர் ஒருவர் மும்பைக்கு, சுமார் 16௦௦ கிமீ தூரம் சைக்கிளிலேயே பயணம் கிளம்பிவிட்டார். இந்த தகவல் சோஷியல் மீடியா மூலமாக சோனு சூட்டுக்கு தெரியவந்தது. உடனே அந்த ரசிகரை தொடர்புகொண்டு, கிட்டத்தட்ட 3௦௦ கிமீ பயணம் செய்திருந்த நிலையில், அவரது பயணத்தை வாரணாசியிலேயே தடுத்து நிறுத்தினார் சோனு சூட்.
அதையடுத்து அந்த ரசிகரை, அவரதுசைக்கிளுடன் சேர்த்து, விமானம் மூலம் மும்பைக்கு வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளார். மும்பை வந்ததும் ஒரு ஹோட்டலில் அவரை தங்க வைப்பதுடன், அவரை சந்தித்த பின், மீண்டும் விமானம் மூலம், தன் செலவிலேயே அவரையும் அவரது சைக்கிளையும் பீஹார் திருப்பி அனுப்ப போவதாக கூறியுள்ளார் சோனு சூட்.