நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
நிவர் புயல் காரணமாக சென்னையில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதை அடுத்து, ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த வெள்ள நீர், ஈவிபி ஸ்டூடியோசில் அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் 4 செட்டிற்குள் புகுந்துள்ளது.
இதனால் நேற்றைய எப்பிசோட்டில் போட்டியாளர்கள் அனைவரும் பதற்றத்துடன் காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என போட்டியாளர்கள் கூறி உள்ளனர். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக போட்டியாளர்கள் அனைவரையும் பூந்தமல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, தங்க வைத்துள்ளனர்.
பிக்பாஸ் செட்டில் உள்ள வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட பிறகு நாளையோ அல்லது அதற்கு பிறகோ போட்டியாளர்கள் மீண்டும் செட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், இத்தகைய சூழலில் கமலஹாசன் பங்கேற்கும் வார இறுதி நாட்களின் எப்பிசோட்களுக்கான சூட்டிங் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நவம்பர் 30 ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.