சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
இந்தியா முழுவதும் கொரானோ தொற்று பாதிப்பு ஏற்பட்டு மூடப்பட்ட தியேட்டர்கள் தமிழ்நாட்டில் எட்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 10ம் தேதியன்று திறக்கப்பட்டது.
அன்றைய தினம் குறைவான தியேட்டர்கள்தான் திறக்கப்பட்டன. அதன்பின் தீபாவளி தினமான நவம்பர் 14ம் தேதி அந்த எண்ணிக்கை கூடுதலானது. ஒரு சில மல்டிபிளக்ஸ், சில சிங்கள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மட்டும் இப்போதும் திறக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தீபாவளியன்று திறக்கப்பட்ட தியேட்டர்களில் சுமார் 70 சதவீதம் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு வெளிவந்த ஓரிரு படங்களுக்கும் ஒரு சில காட்சிகளுக்குத்தான் அரசு அனுமதித்த 50 சதவீத இருக்கைகள் நிரம்பியுள்ளன. மற்ற காட்சிகளுக்கு 10 சதவீதம் பேர் வந்தாலே அதிகம் என்ற நிலை இருந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பாதிப்பு இருந்ததால் பல காட்சிகளை ரத்து செய்துள்ளார்கள். இந்த நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்கிறார்கள்.
நாளை நவம்பர் 27ம் தேதி நான்கு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை சிறிய பட்ஜெட் படங்கள் என்பதால் ஏற்கெனவே வந்த 10 சதவீத மக்களே வந்தால் அப்படங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.
கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்ததில் மக்கள் தியேட்டர்களுக்கு வர விருப்பமில்லாமல்தான் இருக்கிறார்கள். அது சரியாக இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகலாம். பொங்கலுக்கு மாஸ்டர் மாதிரியான பெரிய படங்கள் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்கிறார்கள்.