Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிக் பாஸ் டம்மி பீஸ்களை வெளியே அனுப்புங்க' - பரத் கோபம்

26 நவ, 2020 - 11:27 IST
எழுத்தின் அளவு:
actor-bharath-shares-his-comments-on-bigg-boss

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' சீசன் 4 கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் பரபரப்பும் சண்டையும் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.

தற்போதுள்ள போட்டியாளர்களில் பாலா, சனம், அனிதா, ஆரி, ரம்யா ஆகியோர்தான் தேவையான அளவும், அளவுக்கு மீறியும் பேசுகிறார்கள்.


அர்ச்சனா ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ரியோ, நிஷா, சோம், கேபி, ஜித்தன் ரமேஷ் ஆகியோரை 'அன்பு' என்று சொல்லி அடக்கி வைத்துள்ளார். சம்யுக்தா, பாலா, ஆஜித், ஷிவானி ஆகியோர் மற்றொரு குழுவாக செயல்படுகிறார்கள். நிஷா, சோம், ஜித்தன் ரமேஷ், கேபி, ஆஜித், ஷிவானி ஆகியோர் எந்த தனித்தன்மையும் இல்லாமல் குழுவில் கலந்து இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். மிகப் பெரிய சண்டை என்று எந்த காரசாரமான விவாதமும் நிகழ்ச்சியில் இதுவரையிலும் நடக்கவில்லை.


சில சினிமா பிரபலங்களும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகர் பரத். நேற்றைய நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு மிகவும் கோபமடைந்து போயிருப்பார் போலிருக்கிறது.


“பிக் பாஸில் இருந்து அனைத்து டம்மி பீஸ்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எலிமினேட் பண்ணுங்கள், அவர்களிடமிருந்து எந்த கன்டென்ட்டையும் நான் பார்க்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.


பரத்தின் பதிவைப் பார்த்து நடிகர் பிரேம்ஷி 'நாம் வேண்டுமானால் உள்ளே போகலாமா,” எனக் கேட்டுள்ளார். “உங்களுக்கு விருப்பமா,” என பதிலுக்கு பரத் கேட்க, “உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே” என பிரேம்ஜி பதிலளித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆணவத்தின் தலையில் கொட்டினார் - மிஷ்கின் நெகிழ்ச்சிப் பதிவுஆணவத்தின் தலையில் கொட்டினார் - ... மீண்டும் மூடப்படும் பல தியேட்டர்கள் ? மீண்டும் மூடப்படும் பல தியேட்டர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ravi - chennai,இந்தியா
16 டிச, 2020 - 08:39 Report Abuse
ravi Sir Barath, the biggboss participants need not quarrel but their discussions could be sensible. Archana is nasty and her entire family dominates media. Wherever she is there, she wants others to appreciate her and praise her all the time. After she entered only, the real charm of Biggboss started eroding. Quarrel is not theme, I guess. Among the participants there should be some healthy exchange of dialogues. RHEO, Archana's swine chups at times prets to be gentle and Long-nosy-Gabby raises her voice with no sense. Except Ramya, Ari, none is real. Bala gives entertainment by mental imbalance. Nasty Nisha, sleeping Ramesh, Vadivukkarasi Samyuktha, girly Suresh, odd-man Velmurugan, fighter-fish-Reka already left but still if Archana and Rheo leave Biggboss, there would be a kind of peaceful living in BIGGBOSS but it does not appear to be the main motive of the organizers. If they expect quarrel, how much extent should be told to Bala. Bala even go to the extent of attacking others violently. He needs psychiatric treatment.
Rate this:
karutthu - nainital,இந்தியா
27 நவ, 2020 - 19:04 Report Abuse
karutthu நிவர் புயலை முன்னிட்டு பிக் பாஸ் ஆட்டம் இத்துடன் முடியட்டும்
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
27 நவ, 2020 - 09:39 Report Abuse
Shekar மய்ய தலைவரை நீக்க சொல்லும் இவர் தைரியம் பாராட்டத்தக்கது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in