மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2020-22ம் ஆண்டிற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிறு 22ம் தேதியன்று நடைபெற்றது. 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நலன் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட ராமசாமி என்கிற முரளி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் செயலாளராகவும், ஆர்.கே.சுரேஷ் துணைத் தலைவராகவும், சந்திரபிரகாஷ் ஜெயின் பொருளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்த அணியை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தலைமையிலான பாதுகாப்பு அணி சார்பாக மன்னன், செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத் தேர்தலில் சுயேச்சைகளாக துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சிங்காரவேலன், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஜேஎஸ் சதீஷ்குமார் ஆகியோர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். வாக்காளர்களுக்கு லஞ்சம், பரிசுப் பொருட்கள், ஆகியவை கொடுக்கப்பட்டதாகவும், கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
மேலும், வெற்றி பெற்ற தரப்பினர் ஒரு பெண்மணியை தேர்தல் பணிக்காக ஏஜென்ட் போல நியமித்து முறைகேடுகளை நிகழ்த்தியுள்ளதாகவும் பரபரப்பான குற்றம் சாட்டுகிறார்கள். விரைவில் அதற்கான ஆதாரங்களை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.