Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாக் பேந்தர் 2ம் பாகம் தயாராகிறது

25 நவ, 2020 - 15:25 IST
எழுத்தின் அளவு:
black-panther-part-2-to-be-ready

மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ கதைகளில் மிகவும் புகழ்பெற்றது பிளாக் பேந்தர். கருப்பின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கருப்பின இளைஞனை சூப்பர் ஹீரோவாக்கிய படம் என்பதால் உலகம் முழுக்க இதற்கு வரவேற்பு கிடைத்து. முதல் பாகம் 2018ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்றதோடு வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


இதில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்த சாட்விக் போஸ்மேன் புகழ் பெற்ற நடிகராக மாறினார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று முதல் பாகம் வெளிவந்தபோதே மார்வெல் நிறுவனம் அறிவித்தது. இதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் பிளாக் பேந்தராக நடித்த போஸ்மேன் கடந்த ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தார். இதனால் பிளாக் பேந்தர் 2ம் பாகத்துக்கான பணிகள் நிறுத்தப்பட்டது.


இந்த நிலையில் பிளாக் பேந்தர் 2ம் பாகத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது. படப்பிடிப்பை அடுத்த வருடம் ஜூலை மாதம் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கான தேர்வு நடந்து வருகிறது.


முதல் பாக கதைப்படி உகாண்டா நாட்டில் வைப்ரானியம் என்கிற சக்தி வாய்ந்த புதிய உலோகம் இருக்கிறது. அதை உலகின் கண்களில் இருந்து மறைத்து நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது உகாண்டா. வெளிஉலகத்துக்கு ஏழ்மையான விவசாய நாடாகவும், உள்ளுக்குள் நவீன தொழில்நுட்ப நாடாகவும் இருக்கிறது. உகாண்டாவின் மன்னரே பிளாக் பேந்தர். அந்த நாட்டின் ஆன்மீக சக்தி மற்றும் அபூர்வ மூலிகைகளை கொண்டு உகாண்டா மன்னர்கள் பிளாக் பேந்தர்களாக மாற்றப்படுகிறார்கள்.


இந்த நிலையில் அமெரிக்காவின் கூலிப்படையில் பணியாற்றிய உகாண்டா இளைஞன் ஒருவன் பிளாக் பேந்தராக மாறுவதற்காக பல கொலைகளை செய்து விட்டு உகாண்டா வருகிறான். ஆட்சியை கைப்பற்றி வைப்ரானியத்தை வைத்து உலகையே ஆள நினைக்கிறான். அவனை வென்று அழிப்பார் பிளாக் பேந்தர். உகாண்டாவை வெளிஉலக தொடர்புள்ள ஒரு நாடாக மாற்ற பிளாக் பேந்தர் முடிவெடுப்பதோடு கதை முடியும்.


இரண்டாம் பாகத்தில் வைப்ரானியத்தை பற்றி அறிந்து கொள்ளும் சில நாடுகள் அதை கைப்பற்ற திட்டமிடுவதும், அதை பிளாக் பேந்தர் முறியடிப்பதுமாக கதை இருக்கும் என்கிறார்கள்.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எனது சிறுநீரகம் பாதித்தது உண்மை: உடல்நிலை பற்றி மனம் திறந்த ராணாஎனது சிறுநீரகம் பாதித்தது உண்மை: ... தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு என புகார் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Yogesh -  ( Posted via: Dinamalar Android App )
25 நவ, 2020 - 18:26 Report Abuse
Yogesh Wakanda - imaginary country d for comics.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in