மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தெலுங்கு முன்னணி நடிகர் ராணா சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன் ராணா உடல் நலிவுற்று அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்து விட்டது. மாற்று சிறுநீரக ஆபரேஷன் செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளிவந்தது. இதனை ராணா மறுத்திருந்தார்.
இந்த நிலையில் ஓடிடி தளம் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றும் நடிகை சமந்தாவுக்கு ராணா அளித்த பேட்டியில் தனக்கு இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது உண்மைதான் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கை மிக வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு நிறுத்தம் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்குச் சில உடல் உபாதைகள் இருந்தன. ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் அடைத்திருந்தது.
சிறுநீரகச் செயல்பாட்டில் பாதிப்பு இருந்தது. இதனால் 70 சதவீதம் ரத்தக் கசிவுக்கான, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன. இவற்றை எல்லாம் மீறி தொடர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தேன். ஒரு வகையில் மரணத்திலிருந்து மீண்டு வந்தேன்.
ஆனால் என்னை பற்றி, என் உடல் நிலை பற்றி தொடர்ந்து வரும் வதந்திகளால் வருந்துகிறேன். நான் ஐதராபாத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கிளம்பிச் சென்றால் வதந்தியும் கிளம்பி விடுகிறது. மக்கள் என் மீது வைத்துள்ள அதீத அன்புதான் இதற்கு காரணம் என்பதையும் உணர்கிறேன். என்கிறார் ராணா.