Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காவல்துறையை விமர்சித்து படங்கள் வெளிவருவது ஏன்? வெற்றி மாறன் விளக்கம்

25 நவ, 2020 - 15:11 IST
எழுத்தின் அளவு:
vetrimaaran-about-kaavalthurai-ungal-nanban-movie

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் காவல்துறை உங்கள் நண்பன். சுரேஷ் ரவி, ரவீனா, மைம்கோபி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்டிஎம் இயக்கி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயனும், இயக்குனர் வெற்றி மாறனும் வாங்கி வெளியிடுகிறார்கள். வருகிற 27ந் தேதி வெளிவருகிறது. படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் வெற்றி மாறன் பேசியதாவது:


நடுத்தர மக்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலுக்குள் இருக்கிறோம் என்று ரொம்ப வலுவாகச் சொல்கிற படம் இது. இந்தப் படத்தில் என்னுடைய பெயர் இருப்பது, எனக்கொரு மரியாதையாக இருக்கும் ஆனால் ஒருவருடைய பெயர் இருப்பதால் மட்டுமே மக்கள் படத்தைப் பார்த்துவிடுவார்களா என்று தெரியவில்லை. மக்களுக்குப் படம் பிடித்திருந்தால் பார்ப்பார்கள், பாராட்டுவார்கள்.


இந்த மாதிரியான படங்கள் காவல்துறையின் மீதான விமர்சனம் என்பதைவிட, மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கான முயற்சியாக பார்க்க வேண்டும். தொடர்ச்சியாகப் படங்களில் காவல்துறை விமர்சிக்கப்படுகிறது என்றால், தினசரி வாழ்க்கையில் பார்ப்பதால்தான் . இந்தப் படத்தில் நடக்கும் விஷயங்கள் ஏதோ ஒரு இடத்தில் நாம் பார்த்ததாகவேதான் இருக்கிறது.


ஒரு படத்தை இந்தக் காலகட்டத்தில் திரையரங்கிற்கு எடுத்து வருவதற்குத் தைரியம் வேண்டும். மக்கள் திரையரங்கிற்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒரு சவாலாக மாறிவிட்ட சூழல் இன்றைக்கு இருக்கிறது.


இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குஷ்புவுடன்  மோதும் நடிகை மீரா மிதுன்குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா ... எனது சிறுநீரகம் பாதித்தது உண்மை: உடல்நிலை பற்றி மனம் திறந்த ராணா எனது சிறுநீரகம் பாதித்தது உண்மை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

spr - chennai,இந்தியா
27 நவ, 2020 - 20:20 Report Abuse
spr காவற்துறை உங்கள் நண்பன் என்பது திரு அருள் அத்துறையின் உயர் அதிகாரியாக இருந்து பொழுது உருவாக்கப்பட்ட கருத்து இப்படத்தில் அப்படியொரு நல்ல மதிப்புண்டாக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே இல்லாத துஉரைகளையும் போல காவற்துறையிலும் கறுப்பாடுகள் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று எனினும், அவர்களில் நல்லோர் பலர் இருக்கிறார்கள் அவர்களைக் குறித்து பேசுவது நம் நாட்டின் மதிப்பை உயர்த்தும் குறைகள் இருக்கும் தானியமும் புழுவும் இருந்தாலும் ஒரு சிலர் கோழி புழுவை விரும்பி உண்பது போல குற்றங்களை மட்டுமே படிக்க விரும்பலாம் அவர்களால் விற்பனை அதிகரிக்கும் பணம் வருமென்றால், அந்த செய்திகளை கடைசிப் பக்கத்தில் போடலாமே என்று திரு கலாம் (உண்மையிலேயே மதிக்கப்படுபவரென்றால் ) சொன்னபடி எல்லாவற்றிலும் உள்ள நல்ல செயதிகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் ஆனால் வியப்பான ஒரு விஷயம் தங்களை மட்டமாக சுட்டும் இந்த முயற்சிகளை காவற்துறை "கண்டு கொள்ளவில்லை எதிர்பெதுவும் இன்றளவும் காட்டவில்லை " என்பதுதான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in