மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
எல்லோரைப் பற்றியும் தரக்குறைவாக பேசி விளம்பரம் தேடிக் கொள்கிறவர் மீரா மிதுன். ஒரு சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து விட்டு தன்னை பெரிய நடிகையாக பாவித்துக் கொண்டு தனக்குதானே சூப்பர் மாடல் என்று பட்டம் சூட்டிக் கொண்டவர். இப்போது குஷ்புவின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார்.
தனது டுவிட்டர் அவர் எழுதியிருப்பதாவது: எம்.எல்.ஏ சீட்டுக்கு தி.மு.க கட்சியில் சேர்ந்து 10 வருடம் தி.மு.க ஆட்சிக்கே வர முடியவில்லை. எம்.பி. சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 10 வருடம் காங்கிரஸ் ஆட்சிக்கே வரமுடியவில்லை. இப்போது பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறீர்களே மேடம் குஷ்பு. கார் விபத்து டிராமா. எதிர்காலம் தேருமா? கோலிவுட் மாபியாக்களால்தான் குஷ்பு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். திட்டம் என்ன குஷ்பு?.என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு மீராமிதுனின் பெயரை குறிப்பிடாமல் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: மோசமானவர் என்று நிரூபித்தவரும், கவனத்தை ஈர்க்க பெயர் போனவருமான நடிகை எனது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார். நான் என்ன செய்வது?"என்று குறிப்பிட்டு உள்ளார்.