சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
பிரபுதேவா தற்போது இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கியுள்ள படம் 'ராதே'. இந்த படம் கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தாக்கம் காரணமாக, தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் குறைந்த அளவே வருவார்கள் என்பதால், மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அக்சய்குமார் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரின் படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன.
அந்த வழியை பின்பற்றி சல்மான்கானின் 'ராதே' படமும் ஓடிடியில் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பும் கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.. இதுபற்றி சமீபத்தில் இயக்குனர் பிரபுதேவா கூறும்போது, “ராதே படம் ஓடிடியில் வெளியாவதற்கு, எனக்கு தெரிந்தவரை எந்த வாய்ப்பும் இல்லை.. சல்மான்கான் ஒரு நொடி கூட ஓடிடி ரிலீஸ் பற்றி யோசித்தது இல்லை” என்று கூறியுள்ளார்.