சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
நார்தன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி ஸ்ரீவத்சவா மற்றும் பலர் நடிக்க கன்னடத்தில் 2017ம் ஆண்டுவெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் முப்டி.
இப்படத்தை தமிழில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிக்க, கன்னடப் படத்தை இயக்கிய நார்தன் இயக்க, கர்நாடகாவில் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த வருடம் நடைபெற்றது. ஹெலிகாப்டர் வைத்தெல்லாம் படப்பிடிப்பை நடத்தினார்கள். அந்த சமயத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் சிம்புவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்றதாகச் சொன்னார்கள்.
அதன் பின் படம் தொடர்பான சில பஞ்சாயத்துகளும் நடந்தன. படம் மீண்டும் ஆரம்பமாவது சந்தேகம் என்றும் சொன்னார்கள். ஆனால், சமீபத்திய தகவல்படி தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் கன்னடப் படத்தை இயக்கிய நார்தன் மாற்றப்பட்டு ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி, வண்ண ஜிகினா படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி படத்தை இயக்கப் போவதாகவும் சொல்கிறார்கள். 2021ல் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.
சிம்பு தற்போது ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு, மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.